பூசகர் உட்பட நால்வருக்கு கொரோனா தொற்று உறுதி;ஆலயம் சென்றவர்களுக்கு ஏற்பட்ட அதிர்ச்சி..!!

பூசகருக்கு கொரோனா….

மஸ்கெலியா பிரதேசத்தில் உள்ள ஆலயத்தின் பூசகர் உட்பட நால்வருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானதையடுத்து கோவில் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த ஆலயத்தில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார்.

இதன் பின்னர் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது.

இதனையடுத்து உயிரிழந்த நபருடன் தொடர்புடையவர்களுக்கு நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில், ஆலயத்தின் பூசகர் மற்றும் பிரதேசத்திலுள்ள சிலருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஆலயம் தற்கலிகமாக மூடப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.