பூமியில் இன்றைய தினம் நிகழவுள்ள பாரிய மாற்றம்!

புவியில் இன்று ஓர் மாற்றம்….

புமியில் இன்று ஓர் மாற்றம் நிகழவுள்ளதாக யாழ் பல்கலைக்கழக புவியியல் துறையின் சிரேஷ்ட விரிவுரையாளர் நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய நாளைய தினம் சம இரவு புமியில் நிகழவுள்ளதாக அவர் கூறுகின்றார். குறிப்பாக பூமியின் நடுவாக சூரியன் கடக்கின்ற நாளாக நாளையதினம் அமையப்போகின்றது. இதனால் பூமியின் சரி அரைவாசி கோளத்திற்கு சம இரவும் சம பகலும் நிகழவுள்ளன.

‘Equinox’ என அறிவியலில் குறிப்பிடப்படும் இது சூரியன் நிலநடுக்கோட்டினை கடந்து செல்லும் நாளாகும். equi’ எனபது சமம் என்றும் ‘nox’ என்பது இரவு என்றும் பொருள்படும்.

ஆண்டுக்கு இருமுறை சூரியன் இவ்வாறு நிலநடுக்கோட்டினை கடப்பது நிகழும். இந்த ஆண்டில் மார்ச் 20 அன்றும் செப்டம்பர் 22 அன்றும் இந்த அபூர்வ சம்பவம் நிகழவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.