அம்பாறையில் ஏற்பட்ட பதற்ற நிலை: பதறியடித்து ஓடிய பொதுமக்கள்..!

அம்பாறையில்….

கிழக்கில் உள்ள அம்பாறையில் நூற்றுக்கணக்கான யானைகள் மக்கள் குடியிருப்புக்களில் புகுந்ததனால் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

நேற்று முந்தினம் நடந்த இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,

இலங்கையின் அம்பாறை மாவட்டத்தில் தற்போது நெல் வயல்கள் அறுவடை செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த வயல்களில் உரிமையாளர்களால் தீ வைக்கப்பட்டுள்ளன.

இதனால் வயல்களை நாடிவந்த பெருமளவு யானைகள் மக்கள் குடியிருப்புகளை நோக்கி புகுந்தன. இதனால் மக்கள் பதறியடித்து சிதறியோடியுள்ளதுடன் அவற்றை விரட்டுவதற்காக வனவிலங்கு அதிகாரிகள் கடும் போராட்டத்தின் மத்தியில் நடவடிக்கை எடுத்தனர் என்று கூறப்படுகின்றது.