காலையில் எழுந்து வாசலில் கோலம் போட்ட பெண்…. சற்று நேரத்தில் தூக்கில் தொங்கிய காட்சியால் அ.தி.ர்.ச்.சி…!!

தமிழகத்தில்…

காலையில் எழுந்து வாசலில் கோலம் போட்ட இளம்பெண், ஆனால் கொஞ்ச நேரத்திலேயே சடலமாக கிடந்ததை பார்த்து பொதுமக்கள் அதிர்ந்து போனார்கள்.. இந்த சம்பவம் மயிலாடுதுறையில் நடந்துள்ளது.

தமிழகத்தில் மயிலாடுதுறையை அடுத்த மேலமுடுக்கு தெருவை சேர்ந்தவர் பார்த்திபன்.. இவர் ரயில்வேயில் தற்காலிக பெயின்டராக வேலை பார்த்து வருகிறார்… இவரது மனைவி செல்வக்குமாரி.. கல்யாணம் ஆகி 2 வருஷமாகிறது.. ஒரு வயதில் லிபிஷா என்ற பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில், பார்த்திபனுக்கு விருதுநகருக்கு டிரான்ஸ்பர் கிடைக்கவும் அவர் அங்கு சென்றுவிட்டார்.. இதனால், மாமியார் வீட்டில்தான் செல்வக்குமாரி வசித்து வந்துள்ளார்.. அப்போது பார்த்திபனின் அம்மா தனலட்சுமி, செல்வக்குமாரியிடம் 25 பவுன் நகையை வரதட்சணையாக கேட்டு கொடுமைப்படுத்தியுள்ளார்.. மேலும் வார்த்தைகளால் துளைத்தெடுத்துள்ளார்.

இதனால் வேதனையடைந்த செல்வக்குமாரி, தன் வீட்டிற்கு போன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லி அழுதுள்ளார்.. இந்நிலையில், சம்பவத்தன்று செல்வக்குமாரியிடம் மாமியார் தனலட்சுமி மறுபடியும் வரதட்சணை பிரச்சனையை எழுப்பி தகராறு செய்ததாக கூறப்படுகிறது. இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த செல்வக்குமாரி மனமுடைந்து தன்னுடைய ரூமுக்குள் குழந்தையுடன் சென்று பூட்டிக்கொண்டுள்ளார்.

அதற்கு பிறகு ரொம்ப நேரமாகியும் செல்வக்குமாரி வெளியே வரவில்லை. இதனால் பதறிபோன தனலட்சுமி, அந்த ரூம் கதவை தட்டினார்.. ஆனால் திறக்கப்படவில்லை..

அதனால், அக்கம் பக்கம் வசிப்பவர்களிடம் போய் சொல்லவும், அவர்கள் வந்து கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தபோது, செல்வக்குமாரி மின்விசிறியில் ஃபேனில் தூக்கில் தொங்கி கொண்டிருந்ததை கண்டு அதிர்ந்தனர்.. அவருக்கு பக்கத்தில் குழந்தை லிபிஷாவும் இறந்து கிடந்தது.. அந்த குழந்தையின் காதில் ரத்தம் வழிந்தபடியே இருந்தது.

இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்படவும், விசாரணை ஆரம்பமானது.. செல்வக்குமாரியின் அண்ணன் வரதட்சணை கேட்டு இந்த கொடுமை நடந்ததாக போலீசில் புகார் தந்தார்.. செல்வக்குமாரி எம்சிஏ பட்டதாரியாம்.. 24 வயதாகிறது.. பார்த்திபனும், இவரும் 2 வருடமாக காதலித்து வந்துள்ளனர்.. பிறகு திடீரென வீட்டில் சொல்லி கல்யாணமும் செய்து கொண்டனர்..

அவசரமாக இந்த கல்யாணம் நடந்ததால், பெண்ணுக்கு 3 சவரன் நகை மட்டுமே போட்டுள்ளதாக தெரிகிறது… ஆனால் 25 சவரன் நகை வேண்டும் என்று மாமியார் ஒற்றை காலில் நின்றுள்ளார்..

சம்பவத்தன்றுகூட, செல்வக்குமாரி வீட்டு வாசலை சுத்தம் செய்து கோலம் போட்டுள்ளார்.. இதை அக்கம்பக்கத்தினரும் பார்த்துள்ளனர்.. ஆனால், அடுத்த சில மணி நேரத்தில் பிணமாக கிடந்ததை கண்டுதான் அதிர்ந்தனர்..

இறுதியில் இந்த வழக்கு தொடர்பாக தனலட்சுமி, பார்த்திபன் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். இதனிடையே, செல்வகுமாரி தற்கொலை செய்து கொள்ள வாய்ப்பில்லை என்றும், அதிலும் ஜன்னல் கம்பியில் தூக்கு போட்டிருக்க முடியாது, அந்த ஜன்னல் மிக குறைந்த உயரத்தில் இருக்கும்போது எப்படி தூக்கு போட்டிருக்க முடியும் என்ற சந்தேகமும் கிளம்பி உள்ளது.. இது தொடர்பான விசாரணையும் நடந்து வருகிறது..!