தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு…! கொலையா..? தற்கொலையா…?

தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம்…!

இன்று திருகோணமலை மாவட்டம் தம்பலகாமம் பாலம்போட்டாறு பத்தினிபுரப் பிரதேசத்தில் உள்ள வயல் நிலத்தை அண்டிய குடியிருப்பு குடிசையில் இருந்து தூக்கில் தொங்கிய நிலையில் பெண்ணொருவரின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தம்பலகாமம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சடலமானது இன்று காலை மீட்கப்பட்டுள்ளது.

நல்லூர், மூதூர் எனும் முகவரியை கொண்ட கந்தவேல் இந்திரானி (வயது -46) எனவும் ஆரம்ப கட்ட விசாரணைமூலம் தெரியவந்துள்ளது.

மேலும் இந்த சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,

ஆடு மேய்ப்பதற்காக குறித்த குடியிருப்பு பகுதியில் தனது கணவன் தாயுடன் அப்பகுதியில் வசித்து வந்துள்ளதாக தெரியவருவதுடன் குடிசைப் பகுதிக்குள் கழுத்து கட்டப்பட்ட நிலையில் அரைப்பகுதி உடம்பு தொங்கிய நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில் இது கொலையா? தற்கொலையா? என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரனைகளை தம்பலகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.