தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து; வெளிநாட்டு யுவதி ஒருவருக்கு நேர்ந்த சோகம்…!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் விபத்து….!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் அபரேக்கவிற்கும் பெலியட்ட பரிமாற்றத்திற்கும் இடையில் இடம்பெற்ற விபத்தொன்றில் கஜகஸ்தான் பெண்ணொருவர் படு காயமடைந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

தனியார் வைத்தியசாலையின் அம்பியூலன்ஸ் லொறியுடன் மோதுண்டே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

நேற்றிரவு இந்த விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

குறித்த விபத்தில் காயமடைந்த கஜகஸ்தான் நாட்டைச் சேர்ந்த 29 வயதுடைய யுவதி தற்போது தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அம்பியூலன்ஸ் வாகனம் குறித்த வெளிநாட்டவரை கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையிலிருந்து மத்தள ராஜபக்ஷ விமான நிலையத்திற்கு கொண்டு சென்றபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு முன்னெடுத்து வருகின்றது.