பிரபல ஹோட்டல் ஒன்றில் நடந்த மோதல்! ஊழியர் ஒருவர் உயிரிழப்பு..!

குருணாகலில்…

குருணாகல் பகுதியில் ஹோட்டல் ஊழியர்கள் இருவரின் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலின் போது ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவம் குருணாகல் நகரத்தில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் நேற்று மாலை இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்.

ஹோட்டலுக்கு வந்துள்ள சந்தேக நபர் ஹோட்டல் ஊழியர்களிடம் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்டுள்ளதுடன், பின்னர் கண்ணாடி போத்தலினால் இரு ஊழியர்களை தாக்கியுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதனைத் தொடர்ந்து, காயமடைந்த ஊழியர்களிருவரும் குருணாகல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

கலேவெல பகுதியைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துவருகின்றனர்.