பெட்ரோல் வாசனையை முகர்ந்த 7 வயது சிறுவன் மரணம்…!

7 வயது சிறுவன் மரணம்….!

மோட்டார் வண்டியில் இருந்த பெட்ரோல் வாசனையை முகர்ந்த 7 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்துள்ள சம்பவம் ஒன்று நாட்டில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம், தம்புள்ளை – வெலமிடியாவ பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவத்தில் தம்புள்ளை – வெலமிடியாவ ஆரம்பப்பள்ளியில் தரம் இரண்டில் கல்வி கற்கும் சஜித் குமார முனசிங்க என்ற 7 வயதுச் சிறுவனே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சிறுவன் நேற்று மதியம் தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ள நிலையில், அங்கு வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மோட்டார் சைக்கிளின் எரிபொருள் தொட்டியில் இருந்து மூடியை அகற்றி பெட்ரோல் வாசனை முகர்ந்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

இதனை அடுத்து மயக்கமடைந்த சிறுவனை கலேவெல மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் குறித்த சம்பவம் தொடர்பில் , மேலதிக விசாரணைகளை பொலிஸார் நடத்தி வருகின்றனர்.