மொபைல் கேமால் வந்த மனநோய்…”நான் கடவுள்” என்று கூறி பாட்டியை கொடூரமாக கொ லை செய்த மாணவன்…!!

இந்தியாவில்…

இந்தியாவில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நீண்ட நேரம் ஃப்ரீ ஃபயர் விளையாடி மன நோயால் பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் தனது பாட்டியை கொ லை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர்களின் மனநிலையை சமநிலையை இழக்க செய்யும் செல்போன் செயலிகள் பல தடை செய்யப்பட்டாலும், எஞ்சிய செயலிகளால் தொடரும் அவலங்கள் பெற்றோர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

ஆண்டிராய்டு செல்போன்களை அலங்கரிக்கும் ஆன்லைன் கேம்ஸ்கள் மனிதர்களுக்கு மன நோயை ஏற்படுத்தி வரும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்தவர் ஹரிஹரன் என்ற மாணவன்.

ஹரிஹரன் அப்பகுதியில் உள்ள தனியார் கல்லூரியை மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்த நிலையில், கொரோனா ஊரடங்கால் வீட்டில் இருந்தபடி ஆன்லைன் வகுப்புகளில் பங்கேற்று வந்த ஹரிஹரன் மற்ற நேரங்களில் ஃப்ரீ ஃபயர் விளையாடி வந்துள்ளார். பகலிலும், இரவிலும் தூக்கத்தை மறந்து கேமிலேயே பொழுதை கழித்து வந்த ஹரிஹரனின் நடவடிக்கைகளில் மாற்றங்கள் ஏற்பட துவங்கின. தானாக பேசுவதும், காரணமின்றி கோபப்படுவதுமான மனநிலைக்கு ஹரிஹரன் மாறியதால் அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு பரிசோதித்ததில் கேம் விளையாடி விளையாடி மாணவனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டிருப்பது உறுதியானது. அதனை தொடர்ந்து சில நாட்கள் சிகிச்சைக்கு பிறகு மாணவனை உளுந்தூர்பேட்டையில் உள்ள அவரது பாட்டி வீட்டில் தங்க வைத்துள்ளனர்.

அங்கு பாட்டியுடன் வசித்து வந்த ஹரிஹரன் முறையாக மாத்திரைகளை எடுத்துக்கொள்ளாமல் வந்ததால் மன வியாதி முற்றியுள்ளது. இந்நிலையில் பார்ப்பவர்களிடம் ‘நான்தான் கடவுள்’ என்று கூறி வந்துள்ளார் ஹரிஹரன்.

இந்த சூழலில் சம்பவத்தன்று தனது பாட்டியின் மீது அமர்ந்து தியானம் செய்ய நினைத்த ஹரிஹரன், மூதாட்டியின் நெஞ்சு, தலையில் கல்லை தூக்கிபோட்டுள்ளர். அதனால் படுகாயமடைந்து மூதாட்டி அலறவே அருகிலிருந்தவர்கள் அவரை மீட்க முயற்சித்தனர்.

ஆனால், அருகில் வந்தால் கொ லை செய்துவிடுவேன் என்று ஹரிஹரன் மிரட்டவே, அவர்களால் மூதாட்டியை காப்பாற்ற இயலவில்லை. இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் ஹரிஹரனை கைது செய்து செய்தனர். மூதாட்டியின் உடலை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

dஇதுபோல அண்மையில், திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் 8ஆம் வகுப்பு படித்து வந்த சிறுவன் ஃப்ரீ ஃபயர் விளையாடி வருவதை வாடிக்கையாக வைத்து வந்துள்ளான். அதிக நேரம் கேமை விளையாடி வந்தால் பாய்ண்டுகள் அதிகம் சேரும் என்ற எண்ணத்தில் இருந்து வந்த ராகேஷால் நினைத்த அளவில் ஆர்பி என்று கூறப்படும் பாய்ண்டுகள் கிடைக்கவில்லை. அதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தாயின் புடவையில் தூக்கிட்டு தற் கொ லை செய்துகொண்டது குறிப்பிடத்தக்கது.