இலங்கையில் ஆபத்தான அடுத்த கொரோனா அலை ஆரம்பம்…!

ஆபத்தான பகுதியாக மாறும் சபுகஸ்கந்த…

நாட்டில் உள்ள சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் பதிவான கொரோனா நோய்த்தொற்றாளர்களின் எண்ணிக்கை விரைவாக அதிகரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் உள்ள அனைத்து நிறுவனங்களும் இது தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும் என இலங்கை பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன அறிவித்துள்ளார்.

இதேவேளை குறித்த சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து இதுவரை 474 கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.