ஐ.நாவில் இன்று இறுதி பரீட்சை! திடீரென முக்கிய தலைவர்களுடன் பேச்சு நடத்திய ராஜபக்ஷ சகோதர்கள்…!!

ஐ.நாவில் இன்று வாக்கெடுப்பு…

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இன்று வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

இந்த நிலையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உலக முஸ்லிம் தலைவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை செய்துள்ளனர் என ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டது.

ஜனாதிபதி…

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் (OIC)பொதுச்செயலாளர் , Dr. Yousef A. Al-othaimeen-க்கு நேற்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ அழைப்பை எடுத்தார்.

இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்புக்கும் இலங்கைக்கும் இடையிலான உறவுகள் குறித்து விவாதித்தார் என, OIC ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இலங்கை ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பையும், சர்வதேச அமைப்புகளைத் திறந்து அணுகுவதற்கான அவரது விருப்பத்தையும் பாராட்டியதோடு, இஸ்லாமிய சடங்குகளுக்கு ஏற்ப முஸ்லிம்களின் இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான உரிமை குறித்து இலங்கை அரசாங்கத்தின் முடிவை Dr. Yousef A. Al-othaimeen வரவேற்றார்.

பிரதமர் …

இதற்கிடையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பஹ்ரைனைச் சேர்ந்த துணை மன்னர் Salman bin Hamad Al Khalifa-வை நேற்று தொலைபேசியில் தொடர்பு கொண்டார்.

இலங்கை ஜனாதிபதியின் தொலைபேசி அழைப்பு மற்றும் சர்வதேச அமைப்புகளைத் திறந்து அணுகுவதற்கான அவரது விருப்பம் மற்றும் இஸ்லாமிய சடங்குகளின்படி இறந்தவர்களை அடக்கம் செய்வதற்கான முஸ்லிம்களின் உரிமை குறித்து இலங்கை அரசாங்கத்தின் முடிவை OIC வரவேற்றது.

தான் ஜனாதிபதி பதவியில் இருந்தே இலங்கையில் அமைதியையும் ஸ்திரத்தன்மையையும் நிலைநாட்ட மேற்கொண்ட முயற்சிகளை Salman bin Hamad Al Khalifa நினைவு கூர்ந்து பாராட்டியதாக ராஜபக்ஷ கூறினார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஒரு பகுதியாக இருக்கும் பல முஸ்லிம் நாடுகளை உள்ளடக்கிய உலகின் மிகப்பெரிய முஸ்லிம் அமைப்பு OIC ஆகும்.

ஐ.நா மனித உரிமைகள் கவுன்சில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தில் வாக்களிப்பதற்கு ஒரு நாள் முன்னதாக கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் உலக முஸ்லிம் தலைவர்களுக்கு தொலைபேசி அழைப்புகளை செய்துள்ளனர்.