நாட்டை உலுக்கிய கோர விபத்து; தாய், தந்தையை இழந்து தவிக்கும் குழந்தையின் கேள்வி..!!

பசறை விபத்து…

கடந்த சனியன்று காலையில் பசறையில் இடம்பெற்ற கோரவிபத்து 15 பேர் உயிரிழந்துள்ளனர்.

இந்நெ விபத்தில் இளம் தம்பதி இருவர் உயிரிழந்துள்ளனர். அவர்களின் , ஏதுமறியா குழந்தை ஒன்று கேட்ட கேள்வி பலரின் நெஞ்சங்களை உலுக்கியுள்ளது. ஏனெனில் அதற்கான பதில் யாரிடமும் இல்லை.

தனது தாய் தந்தை ஏன் இவ்வளவு அழகாக உடுப்பு உடுத்தி தூங்குகின்றார்கள்? எப்போது எழுவார்கள் என கேட்கும் ஏதுமறியா அந்த குழந்தை கேட்டுள்ளது. இதற்கு என்ன விளக்கம் கொடுக்க முடியும்.

எனவே தயவு செய்து சாரதிகளே நீங்கள் செல்லுமிடத்திற்கு சிறிதுநேரம் தாமதமானாலும் பரவாய் இல்லை மிகவும் பொருமையாக வாகனத்தை செலுத்துங்கள் . மிதமிஞ்சிய வேகம் உயிரை பறிக்கும் என்பதை உணர்ந்து செயல்படுங்கள்.

ஒன்றும்மறியா எத்தனையோ ஜீவன்கள் உங்களை நம்பி தங்கள் பயணத்தை தொடர்கின்றார்கள். வீட்டில் இருக்கும் குழந்தைகளிடம் நாம் திரும்ப வரமாட்டோம் என யாரும் சொல்லிவிட்டு வருவதில்லை.