நீரில் மூழ்கி இளைஞர்கள் இருவர் பலி..!!

நீரில் மூழ்கி இருவர் பலி…

நேற்றைய தினம் மாவனெல்லை, போவெல்ல பகுதியில் நீராட சென்ற 7 பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

24 வயதுடைய இரண்டு இளைஞர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

நேற்று மாலை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

7 பேர் அடங்கிய குழுவொன்று மாவனெல்லை, போவெல்ல பகுதியிலுள்ள மாஓயாவில் நீராட சென்றுள்ளனர். இதன் போதே இவர்களில் இருவர் மாயமாகியுள்ளனர்.

இந்த நிலையில் உயிரிழந்த இளைஞர்கள் இருவரினதும் சடலங்கள் மாவனெல்லை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், சம்பவம் தொடர்பில் மாவனெல்லை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.