பசறையில் மற்றுமொரு கோர விபத்து; பெண் ஒருவர் பலி…!

பசறையில் மீண்டும் ஒரு விபத்து…!

கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற கோர விபத்தை அடுத்து பசறை – தொழும்புவத்தை – 3ஆம் கட்டை பகுதியில் மீண்டும் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

பசறையிலிருந்து படல்கும்புர நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்று எதிர் திசையில் வந்த சிறிய ரக பாரவூர்தியுடன் மோதுண்டதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் பயணித்த முச்சக்கரவண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானதாகவும் அதில் பெண் ஒருவர் பலியானதுடன்மேலும் இருவர் காயமடைந்துள்ளனர்.

குறித்த விபத்தில் காயமடைந்தவர்கள் பசறை மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸ் அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.