பொலிஸ் நிலையத்தில் வைத்தே மனைவி மீது அசிட் வீசிய நபர்…!

மனைவி மீது அசிட் வீசிய நபர்…!

பொலிஸ் நிலையத்துக்குள் வைத்து தனது மனைவி மீது கணவன் அசிட் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

குறித்த சம்பவம் காலி – உடுகம பொலிஸ் நிலையத்தில் நேற்றுக்காலை இடம்பெற்றுள்ளது.

இதில் படுகாயமடைந்த மனைவி காலி-கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குடும்ப தகராறு காரணமாக அளிக்கப்பட்ட முறைப்பாடு ஒன்றின் அடிப்படையில் கணவன் மற்றும் மனைவி இருவரும் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு இருந்தனர்.

இதன்போதே கணவனால் (32) மனைவி (28) மீது அசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.. இவர்களுக்கு மூன்று குழந்தைகளும் உள்ளனர்.

இதனை அடுத்து பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்ததுடன், சந்தேகநபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.