அமெரிக்காவில் இனந்தெரியாதவரால் து.ப்.பா.க்.கி.ச்.சூ.டு – பொலிஸ் அதிகாரி உட்பட 10 பே.ர் ப.லி!

அமெரிக்காவில் து.ப்.பா.க்.கி.ச்.சூ.டு..

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் இனந்தெரியாத நபரால் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் பொலிஸ் அதிகாரி உள்பட 10 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும் இதுபற்றி தெரிய வருவது,கொலராடோ மாகாணத்தில் போல்டர் பகுதியில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் இனந்தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியுடன் வந்து அங்கிருந்த மக்களை நோக்கி சரமாரியாக சுட்டுள்ளார்.

இதன் போது மக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். மர்ம நபர் துப்பாக்கிசூட்டுக்கு பலர் காயம் அடைந்து இரத்த வெள்ளத்தில் கீழே விழுந்துள்ளனர்.

தகவல் அறிந்து பொலிசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்துள்ளனர்.இதன் பின்னர் அவர்கள் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவரை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். அப்போது நடந்த துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி எரீக்டேலி என்பவர் உயிரிழந்தார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து அந்த இனந்தெரியாத மர்ம நபரை மடக்கி பிடித்து கைது செய்துள்ளார்கள். அதன் போது குறித்த நபர் இரத்த காயத்துடன் காணப்பட்டார். அத்துடன் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டில் 10 பேர் பலியாகியுள்ளனர்

இதனைப் போன்றே கடந்த வாரம் ஜோர்ஜியா மாகாணம் அட்லாண்டாவில் உள்ள மூன்று மசாஜ் பார்லர்களில் இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 6 ஆசிய பெண்கள் உள்பட 8 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.