இன்று காலை நிகழ்ந்த கோ.ர வி.ப.த்.து..!பொலிஸ் அதிகாரி உட்பட இருவர் ப.லி..!!

காலை இடம்பெற்ற கோர வி.ப.த்.து..!

ராஜகிரிய பிரதேசத்தில் இன்று காலை நிகழ்ந்த கோர விபத்தில் உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உட்பட இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விபத்து சம்பவம் ராஜகிரிய மேம்பாலத்திற்கு அருகில் உள்ள பொலிஸ் அரணை நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் வாகனம் ஒன்று மோதுண்டதில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விபத்து சம்பவத்தில் 52 வயதான உப பொலிஸ் பரிசோதகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

மேலும் இந்த விபத்தின் போது பொலிஸ் அரணை மோதிய குறித்த மோட்டார் வாகனம் வேகக்கட்டுப்பாட்டை இழந்து நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியுடன் மோதியதில் லொறியில் பயணித்த ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.