இலங்கையில் கொரோனா கொத்தணியாக மாறும் இந்து ஆலயம்..!

இந்து ஆயத்தில் பலருக்கு கொரோனா தொற்று….

இலங்கையில் இந்து ஆலயமொன்றில் கொரோனா கொத்தணி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் – மஸ்கெலிய பிரதேசத்தில் உள்ள இந்து ஆலயமொன்றிலேயே இந்த கொத்தணி உருவெடுத்துள்ளதாக மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.

குறித்த ஆலயத்தில் 11 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும் ஆலய நிர்வாகத்திலுள்ள ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்ட நிலையிலேயே நடத்தப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனைகளில் ஏனைய 11 பேருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில் குறித்த ஆலயத்துடன் தொடர்புடைய 35 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனை அடுத்து மேலும் , பலர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மஸ்கெலிய சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது.