இலங்கையில் பாடசாலை ஒன்றில் 20 பேருக்கு கொரோனா தொ.ற்.று…!

பாடசாலையில் கொரோனா கொத்தனி….!

நாட்டில் நுவரெலியா கல்வி வலயத்திற்கு உட்பட்ட கொட்டகலை பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் சுகாதார அதிகாரிகள் திடீர் பரிசோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில் பாடசாலையினுள் சுகாதார நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என மாணவர்களின் பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பாடசாலை அபிவிருத்தி செயற்குழுவினால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய இவ்வாறு சுகாதார அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனை அடுத்து இந்த பாடசாலையில் இதுவரையில் 10 ஆசிரியர்கள் மற்றும் 10 மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த பாடசாலையினுள் சுகாதார நடைமுறைகள் முறையாக பின்பற்றப்படமை இனங்காணப்பட்ட பின்னர் சுகாதார அதிகாரிகள் அதிபரை கடுமையாக எச்சரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.