இலங்கை அதிவேக நெடுஞ்சாலையில் திடீரென தீபற்றி எ.ரி.ந்.த வா.க.ன.ம்!

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில்…

இலங்கை தெற்கு அதிவேக சாலையில் மோட்டார் வாகனம் ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொட்டாவை மற்றும் அத்துருகிரியவிற்கு இடையில் நேற்று இரவு 8.30 மணியளவில் இந்த தீ விபத்து சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இதன் போது தீயினை கட்டுப்படுத்துவதற்காக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்தை நோக்கி வந்துள்ளதாக கூறப்படும் நிலையில் குறித்த மோட்டார் வாகனம் முழுவதுமாக தீக்கிரையாகியுள்ளதாக கூறப்படுகின்றது.

இந்த தீ விபத்துக்கான காரணம் இதுவரை என்னவென்று தெரியவரவில்லை. இந்த விடயம் குறித்து பொலிஸார் விசாரணையினை முன்னெடுத்து வருகின்றனர்.