பசறையில் விபத்துக்குள்ளான பஸ் குறித்து வெளியான புதிய செ.ய்.தி!

பசறை விபத்து…!

பசறை – 13ஆம் கட்டைப் பகுதியில் கடந்த சனி கிழமை நடந்த பாரிய விபத்து தொடர்பில் விசாரணைகள் நடைபெற்றுவரும் நிலையில் குறித்த பேருந்து தொடர்பில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.

இந்த பஸ் தேசிய போக்குவரத்து ஆணையத்தால் (என்.டி.சி) கண்காணிக்கப்படும் ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தை பயன்படுத்தவில்லை என தேசிய போக்குவரத்து ஆணையத்தின் இயக்குநர் ஜெனரல் நிலான் மிரண்டா குறிப்பிட்டுள்ளார்.

குறித்த பேருந்து ஜி.பி.எஸ் தொழில்நுட்ப சிம் கார்ட்டை பெற்றாலும் அதை செயற்படுத்தத் தவறிவிட்டதாகவும், எனவே பஸ் தமது கட்டமைப்புக்குள் இணைக்கப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அதேவேளை வாகங்களின் நீண்ட தூர சேவையில் ஈடுபடும் பஸ்களின் வேகத்தையும் பாதையையும் கண்காணிக்க வடிவமைக்கப்பட்ட தொழில்நுட்பமே ஜி.பி.எஸ் தொழில்நுட்பமாகும்.

அத்துடன் அதில் 3069 பஸ்களில் 1168 பஸ்கள் மட்டுமே ஜி.பி.எஸ் தொழில்நுட்பத்தால் இணைக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தர உறுதி பிரிவின் இயக்குநர் ஷெரின் அத்துகோரல தகவல் வெளியிட்டுள்ளார்.