கணவன் விபத்தில் பலி..! அடுத்து மனைவி செய்த காரியத்தால் அதிர்ந்து போன உறவினர்கள்…!!

இந்தியாவில்…

இந்தியாவில் கணவனின் இழப்பை தாங்க முடியாமல் மனைவி தூக்கிட்டு த.ற்.கொ.லை.க்.கு முயன்ற சம்பவம் மரக்காணம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ரமேஷுக்கும், சரளாவுக்கும் சில மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடைபெற்று இருவரும் தங்களுடைய வாழ்க்கையை ஆரம்பித்துள்ளனர்.

இந்த நிலையில் கணவன் ரமேஷ் வாகன விபத்தொன்றில் சிக்கி உயிரிழந்தார்.

தனது கணவன் இறந்ததை தாங்க முடியாமல் மனைவி சரளா தற்கொலைக்கு முயன்றுள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் அடுத்த ஏந்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரமேஷ். இவர் நேற்றிரவு இருசக்கர வாகனத்தில் வானூரிலிருந்து இருந்து கிளியனூர் அருகே வந்து கொண்டிருந்தபோது வாகனம் கட்டுப்பாட்டை இழந்து பனை மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து சம்பவத்தில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்.

தகவலறிந்த கிளியனூர் போலீசார் அவரது உடலை கைப்பற்றி புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

மேலும் அவருடன் சென்ற இருவர் படுகாயமடைந்த நிலையில், அவர்களுக்கு புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதனிடையே, ரமேஷ் இறந்தததை அறிந்த அவரது மனைவி சரளா, கணவர் இறந்த துக்கத்தை தாங்கிக்கொள்ள முடியாமல் ஜிப்மர் மருத்துவமனையின் கழிப்பறையில் சென்று துப்பட்டாவின் மூலம் தூக்கிட்டு த.ற்.கொ.லை.க்.கு முயற்சித்துள்ளார்.

இதனை அறிந்த அவரது உறவினர்கள் சரளாவை மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ரமேஷுக்கும், சரளாவுக்கும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் காதல் திருமணம் நடைபெற்றது குறிப்பிடத்தக்க விடயமாகும்.