திருமணம் செய்யுமாறு தொ.ல்.லை;கல்லூரி மாணவி எடுத்த விபரீத மு.டி.வு..!!

தமிழகத்தில்…

தருமபுரி அருகே இளைஞன் ஒருவர் காதல் செய்யுமாறு தொல்லை செய்ததால் கல்லூரி மாணவி ஒருவர் த.ற்.கொ.லை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தருமபுரி மாவட்டம் காரிமங்கலத்தை அடுத்த மல்லிக்குட்டை பிரதேசத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவர் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தமிழ்ச்செல்வி. இந்த தம்பதிக்கு லிசாலினி (19) என்ற மகள் உள்ளார்.

இவர் தருமபுரியில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வருகின்றார். இந்த நிலையில் லிசாலினியை கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக கவுண்டர்கொட்டாயைச் சேர்ந்த தவமணி (26) என்பவர் ஒருதலையாக காதலித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

கல்லூரிக்கும் சென்று வரும் லிசாலினியை பின் தொடர்ந்து வந்த தவமணி தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு தொல்லை செய்துள்ளார்.

இதது தாங்க முடியாமல் பலமுறை மாணவி எச்சரித்தும் அவர் விடவில்லை. இந்நிலையில், கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு லிசாலினியின் வீட்டுக்கு தனது நண்பர்கள் ஆறு பேருடன் சென்றுள்ளார் தவமணி. அப்போது, என்னை ஏன் காதலிக்க மறுக்கிறாய்? ஒழுங்காக என்னை திருமணம் செய்துகொள் என்று மி.ர.ட்.டி சென்றுள்ளார்.

இதனையடுத்து, நேற்று காலை விசாலினி வீட்டில் தூக்கிட்டுள்ளார். அதனை கண்டு அதிர்ந்துபோன பெற்றோர் அவரை தருமபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். எனினும், விசாலினி போகும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த விடயம் குறித்து மாணவியின் பெற்றோர் காரிமங்கலம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். வழக்கு பதிவு செய்த போலீசார் தவமணியை கைது செய்து நண்பர்கள் 6 பேரை தேடி வருகின்றனர்.