தோட்டத்திற்கு மரக்கறிகளை பறிக்கச் சென்ற பெ.ண்.ணு.க்.கு நேர்ந்த சோ.க.ம்..!

தோட்டத்தில் மின்சாரம் தாக்கி பெண்ணொருவர் ம.ர.ண.ம்..!

ஹாலிஎல பிரதேசத்தில் பயிர் நிலத்தை பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின் வேலியில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த பெண்ணின் கணவனால் அமைக்கப்பட்டிருந்த வேலியில் சிக்கியே இவ்வாறு அவர் உயிரிழந்தாக கூறப்படுகின்றது.

இந்த நிலையில் ஹாலி எல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட லந்தேவெல பிரதேசத்தில் நேற்று செவ்வாய்கிழமை காலை பெண்ணொருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

பயிர் நிலத்தை காட்டு விலங்குகளிடமிருந்து பாதுகாக்கும் நோக்கத்தில் உயிரிழந்த பெண்ணின் கணவர் மின்சார இணைப்பொன்றை அமைத்து வைத்துள்ளதுடன் , அதனை இரவு நேரம் மாத்திரமே செயற்பாட்டில் வைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் , காலை வேளைகளில் அதனை அகற்றியுள்ள அவர் , சம்பவ தினத்தன்று உறக்கத்தில் இருந்ததன் காரணமாக அதனை அகற்ற மறந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இதனை அறியாத அவரது மனைவி , காலைவேளை உணவை சமைப்பதற்காக , தங்களது தோட்டத்தில் உள்ள மரக்கறிகளை பறிக்கச் சென்றுள்ளார்.

இதன் பின்னர் மின்சார தாக்குதலுக்குள்ளாகியுள்ளதுடன் , நீண்டநேரம் தாய் வீடு திரும்பாமையின் காரணமாக அவரது மகள் அங்கு தேடிச் சென்றுள்ளார்.

இதனை அடுத்து தாய் மயங்கி விழுந்திருப்பதை அவதானித்த அவர் அயலவர்களுடன் இணைந்து தாயாரை வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்றுள்ளதுடன் , அதன்போதும் அவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலையின் நிர்வாகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த சம்பவத்தில் ஹாலி எல – லந்தேவெல பிரதேசத்தை சேர்ந்த 56 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதுடன் , 59 வயதுடைய அவரது கணவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

இந்த சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை ஹாலி எல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.