நாட்டில் இன்று சில இடங்களில் பலத்த கா.ற்.று வீ.ச.க்.கூ.டு.ம்…!

இன்றைய வானிலை….

நாட்டில் சப்ரகமுவ, மேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல இடங்களில் மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்வதற்கான சாத்தியம் உள்ளது.அத்துடன் இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி கிடைக்கப்பெறும்.

மேலும் ஊவா மாகாணத்திலும் ஹம்பாந்தோட்டை, மட்டக்களப்பு மற்றும் அம்பாறைமாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.

அத்துடன் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்ளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தகவல் வளிமண்டலவியல் திணைக்களம்.