“புத்தரை மண்ணில் தேடாமல் மனங்களில் தேடுங்கள்”; தொல்பொருள் திணைக்களத்தை திருப்பியனுப்பிய ம.க்.க.ள்..!

கிளிநொச்சியில்…

கிளிநொச்சி உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் தொல்லியல் திணைக்கள அதிகாரிகள் இன்று அகழ்வாராச்சியை மேற்கொள்ள வந்த நிலையில் அப் பிரதேச பொதுமக்கள் அவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பியுள்ளனர்.

இந்த நிலையில் உருத்திரபுரம் சிவன் ஆலயத்தில் இன்று அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்படவுள்ளதாக வெளியான தகவலையடுத்து, அங்கு நேற்று முன்தினம் தொடக்கம் எதிர்ப்பு போராட்டம் நடந்து வருகிறது.

வட மாகாண தொல்லியல் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அடங்கிய குழுவினர் இன்று காலை உருத்திரபுரம் சிவன் ஆலயத்திற்கு சென்றுள்ளனர்.

இதன்போது , அவர்களை உள்ளே செல்ல விடாது மறித்த பொது மக்கள் கோசங்களை எழுப்பியவாறு தடுத்து நின்றனர்.

வரலாற்றை மாற்றாதே, மண்ணில் புத்தரை தேடாதே, மனங்களில் புத்தரை தேடு, எங்களது சிவன் எங்களுக்கு வேண்டும், என்பது போன்ற கோசங்களை எழுப்பி எதிர்ப்பில் ஈடுபட்டனர்.

இதையடுத்து அங்குவந்த பொலிசார் நிலைமையை சுமுகமாக்க முயற்சித்ததுடன் உருத்திருபுரம் சிவன் ஆலயத்திற்குரிய காணி உறுதியுடன் பொலிஸ் நிலையம் வருமாறு ஆலய நிர்வாகத்திற்கு அவர்கள் அறிவுறுத்தினர்.

இதேவேளை,பொதுமக்கள் தமது கடமைக்கு இடையூறு விளைவிப்பதாக தெரிவித்து நீதிமன்றத்தை நாடவுள்ளதாக தொல்லபொருள் திணைக்கள வடபிராந்திய பணிப்பாளர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.