யாழில் வியாபாரிகளுக்கு கொ.ரோ.னா தொ.ற்.று! முடக்கப்பட்ட மரக்கறி ச.ந்.தை..!

யாழில் மரக்கறி சந்தை முடக்கம்…!

யாழ்-மாநகரில் மரக்கறி சந்தைத் தொகுதி மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளதாக வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் அறிவித்துள்ளார்.

மரக்கறி, பழங்கள், உள்ளூர் உற்பத்திகள் மற்றும் வெற்றிலைக் கடைகள் அடங்கிய சந்தைப் பகுதி மாத்திரம் இவ்வாறு மூடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

யாழ்ப்பாணம் மாநகர மரக்கறி சந்தைத் தொகுதியில் எழுமாறாக 60 பேரிடம் நேற்று மாதிரிகள் எடுக்கப்பட்டன.

இதில் அவர்களில் 9 வியாபாரிகளுக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. 6 உள்ளூர் உற்பத்திப் பொருள்கள் (பனம் பொருள்கள்) வியாரிகளும், மூவர் மரக்கறி வியாபாரிகளும் உள்ளடங்குகின்றனர்.

இதன் காரணமாக சந்தைத் தொகுதியின் அத்தனை வியாபாரிகளும் சுயதனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.