கோர விபத்தில் பெற்றோரை இழந்து தவித்த 3 கு.ழ.ந்.தை.க.ள்…!நல்ல உள்ளம் கொண்ட மருத்துவர் செய்த காரியம்..!!

பசறை விபத்தில் பெற்றோரை இழந்த பிள்ளைகள்…!

அண்மையில் இடப்பெற்ற பசறை விபத்தில் தாய் தந்தையை இழந்து தவித்த மூன்று குழந்தைகளுக்கும் உதவுவதற்கு வைத்தியர் ஒருவர் முன்வந்துள்ள சம்பவம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

கடந்த 20ஆம் திகதி பதுளை – பசறையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் 15 பேர் உயிரிழந்திருந்தனர்.

இதில் மூன்று குழந்தைகள் தமது தாய் தந்தையை இழந்தது லுனுகலையில் பாட்டியுடன் வசித்து வருகின்றனர்.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களில் தகவல்கள் வெளியான நிலையில், குறித்த குழந்தைகளுக்கு உதவ அம்பாறை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் டாக்டர் வஜிர ராஜபக்ஷ முன்வந்துள்ளார்.

தமது பெற்றோரை இழந்த மூன்று குழந்தைகளையும் கவனித்துக் கொள்ள விரும்புகிறேன் என கூறி அவர்களை தத்தெடுக்க பசறை பொலிஸாரிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதன் பின்னராக, டாக்டர் வஜிர ராஜபக்ஷவின் கோரிக்கை குறித்து பசறை பொலிஸார் நீதிமன்றத்திற்கு தகவல் அளித்துள்ளதாக பொலிஸ் வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

இந்த நிலையில் மருத்துவர் வஜிர ராஜபக்ஷவிற்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.