காட்டு யானையின் கோர தாக்குதல்; பரிதாபமாக இருவர் ப.லி.!

காட்டு யானை தாக்குதலில் இருவர் ப.லி…!

இன்று காலை காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளாகி மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயிரிழந்துள்ளதுடன்,நேற்றைய தினமும் யானை தாக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலன்னறுவை அத்தனகடவல யாய 31 பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பண்ணையில் இருந்து இன்று காலை தனது வீடு நோக்கி வந்துக் கொண்டிருந்த போதே காட்டு யானை இந்த நபரை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது, குறித்த நபரை சுமார் 50 மீற்றர் தூரத்திற்கு காட்டு யானை இழுத்துச் சென்றுள்ளதாக கிராமவாசிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கிராமத்தை சுற்றி மின் வேலி அமைக்கப்பட்டுள்ள போதும் அதில் மின்சாரம் இல்லாத காரணத்தால் காட்டு யானைகள் இவ்வாறு கிராமத்திற்குள் நுழைவதாக கிராமவாசிகள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

அத்துடன் நேற்றைய தினம் (26) அம்பாறை கொடவெஹெர பிரதேசத்தில் காட்டு யானை தாக்குதலுக்கு உள்ளான 28 வயதுடைய இளைஞன் ஒருவன் உயிரிழந்திருந்தமையும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.