நீர்த்தேக்கத்தில் மிதந்து வந்த பெண்ணின் சடலம்..!

கொத்மலை நீர்த்தேக்கத்தில் பெண்ணொருவரின் சடலம் மீட்பு….

தலவாக்கலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மேல் கொத்மலை நீர்தேகத்திலிருந்து இன்று காலை பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தெரிய வருவது;கொத்மலை நீர்தேகத்தில் சடலமொன்று மிதப்பதைக்கண்டு பிரதேச மக்கள் தலவாக்கலை பொலிஸருக்கு தகவல் அறிவித்துள்ளனர்.

இதன் பின்னர் சம்பவ இடத்திற்கு பொலிஸார் வந்து குறித்த சடலத்தை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் இதுவரை யாருடையது என அடையாளம் காணப்படவில்லை என்றும் சுமார் 30ற்கும் 35ற்கும் இடையிலான வயது மதிக்கதக்க பெண் எனவும் மேலதிக விசாரணைகளை தொடர்வதாகவும் தலவாக்கலை பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் குறித்த பெண்ணின் சடலம் நீரில் அடித்துக் கொண்டு வந்து உயிரழந்தாரா அல்லது நீர் தேக்கத்தில் பாய்ந்து உயிரிழந்தாரா அல்லது கொ.லை செய்து நீர்தேக்கத்தில் போட்டு சென்றார்களா என்பது தொடர்பாக பலகோணங்களில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.