பாடசாலைகளை ஆரம்பிப்பதற்காக வெளியான விஷேட சு.ற்.ற.றி.க்.கை..!

கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்ட சு.ற்.ற.றி.க்.கை…

மேல் மாகாண பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கான விஷேட சுகாதார நடைமுறைகள் கொண்ட சுற்றிக்கையினை கல்வி அமைச்சு வௌியிட்டுள்ளது.

இதன் படி மேல் மாகாணத்தில் உள்ள அரச மற்றும் அரச அனுமதி பெற்ற பாடசாலைகளின் முதலாம் தரம் உட்பட இதுவரையில் ஆரம்பிக்கப்படாத வகுப்புகளை எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பிப்பது தொடர்பில் குறித்த சுகாதார நடைமுறைகள் உள்ளடங்கிய சுற்றிக்கை வௌியிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கல்வி அமைச்சின் செயலாளர் கபில பெரேராவினால் மாகாண பிரதான செயலாளர்கள், மாகாண கல்வி செயலாளர்கள், மாகாண கல்வி பணிப்பாளர்கள், வலய கல்வி பணிப்பாளர்கள், கோட்ட பிரிவு கல்வி பணிப்பாளர்கள் மற்றும் அதிபர்களுக்கு இது குறித்த சுற்றிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.