16 வருடங்களுக்கு முன்னர் கணவன் எழுதிய கடிதம்; மனைவியின் கையில் சிக்கியதால் நேர்ந்த சோகம்..!!

அயல் வீட்டு பெண்ணிற்கு கணவன் எழுதிய கடிதம்….

16 வருடங்களின் முன்னர் பக்கத்து வீட்டு பெண்ணுக்கு எழுதிய காதல் கடிதம் மனைவியின் கைக்கு கிடைத்ததால், முதியர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் கேகாலையில் அரங்கேறியுள்ளது.

விரக்தியில் வீட்டைவிட்டு வெளியேறிய 78 வயது முதியவர் ஒருவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து தனது உயிரை மாய்த்துள்ள நிலையில், கேகாலை பொது மருத்துவமனைவியில் அவரது மரண விசாரணை நடந்தபோது, இந்த தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் உயிரிழந்த முதியவர் கண்டி பொலிஸ் பிரிவிற்குட்பட்டவர் என்றும் இறந்தபோது அவருக்கு வயது 78 எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ரம்புக்கணை புகையிரத நிலையத்திற்கு அருகில் முதியவர் புகையிரதத்தின் முன் பாய்ந்து உயிரை மாய்த்திருந்த நிலையில் அவரது சிதைந்த சடலம் மீட்கப்பட்டபோதும் அடையாளம் காண முடியவில்லை.

5 நாட்களின் பின்னர் மனைவி, பிள்ளைகள் அடையாளம் காணப்பட்டதை அடுத்து அவரது மரண விசாரணை கடந்த 22ஆம் திகதி நடந்துள்ளது.

இதன்போதே உயிரிழந்த முதியவரின் மனைவி தெரிவிக்கையில்

சுமார் 16 ஆண்டுகளுக்கு முன்பு, என் கணவர் அயல்வீட்டு பெண்ணுக்கு ஒரு காதல் கடிதம் எழுதியுள்ளார். அந்தப் பெண்ணின் கணவர் இறந்துவிட்டார். எனது கணவர் எழுதிய கடிதம் அவரது மகனால் கண்டுபிடிக்கப்பட்டு என்னிடம் கொண்டு வரப்பட்டது. அதில் என் கணவர் இருவரும் ஓடிப்போய் நன்றாக வாழ்வோம் என அவளுக்கு எழுதியிருந்தார்.

இந்த கடிதத்தைப் பற்றி நான் என் கணவரிடம் கேட்டபோது, ​​அவர் என்னுடன் சண்டையிட்டு வீட்டைவிட்டு வெளியேறினார். அப்போது அவரது கணவருக்கு 62 வயது என்ரும், 6 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை விட்டு வெளியேறிய கணவர் திரும்பி வரவில்லை என்பதுடன் அவர் பற்றிய எந்த தகவலும் கிடைக்கவில்லை என கூறிய மனைவி இன்று அவரது உடலைப் பார்த்தோம் என சாட்சியம் வழங்கியுள்ளார்.

அத்துடன் 16 ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் அடுத்த வீட்டு பெண்ணுக்கு எழுதிய காதல் கடிதத்தையும் மரண விசாரணை அதிகாரிக்கு அவர் வழங்கினார்.

இதனையடுத்து முதியவரின் மரணம் த.ற்.கொ.லை.யெ.ன முடிவு செய்த பின்னர், மனைவி சடலத்தை பொறுப்பேற்று இறுதிச்சடங்கை செய்த்தாகவும் மேலும் தெரிவிக்கப்படுகின்றது.