தபால் வழியாக நாட்டிற்கு வந்த பொருள்..! அதிர்ச்சியில் பொலீஸார்..!!

தாபால் முலமாக போதைப்பொருள் கடத்தல்…

நாட்டிற்கு தபால் மூலமாக போதைப்பொருளை கடத்தும் மோசடியொன்று இடம்பெறுவதாக பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 27 ஆம் திகதி டுபாயில் இருந்து விமானம் மூலமாக இந்நாட்டிற்கு பொதியொன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த பொதியில் குறிப்பிடப்பட்டிருந்த பெயர் போலியானது என கண்டுபிடிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, குறித்த பொதியினை பெற்றுக் கொள்ள எந்தவொரு நபரும் வருகை தராத நிலையில் அது சந்தேகத்திற்கிடமான பொதியாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பொதியினுள் கஞ்சா கலந்த குஷ் என்ற போதைப்பொருள் 27 கிராமும், குஷ் ஒய்ல் 38 கிராமும் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இதனைப் போன்றே கடந்த வருடம் ஜனவரி மாதம் 4 ஆம் திகதி பிரான்ஷில் இருந்து டுபாய் ஊடாக நபரொருவருக்கு பொதியொன்று கிடைத்துள்ள நிலையில், அதில் இருந்து 4,962 போதை மாத்திரைகள் கண்டுபிடிக்கப்பட்டன.

குறித்த பொதியும் போலியான பெயரில் அனுப்பி வைக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் இலங்கை சுங்கம், குறித்த பொதியை அனுப்பி வைத்த நிறுவனத்துடன் இணைந்து மேலதிக விசாரணைகள் மேற்கோண்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண குறிப்பிட்டுள்ளார்.