கார் ஒன்றில் இருந்து மீட்கப்பட்ட ஆணொருவரின் சடலம்…!

காரில் இருந்த சடலம்…

சூப்பர் விற்பனை நிலையமொன்றுக்கு அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்றினுள் இருந்து ஆண் ஒருவரின் சடலமொன்று மீட்க்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் (27) மாலை 3.00 மணியளவில் சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சிலாபம் – புத்தளம் வீதியில் அமைந்துள்ள சூப்பர் விற்பனை நிலையத்திற்கு அருகில் வாகன தரிப்பிடத்தில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

அத்துடன் வாகனத்தின் சாரதி இருக்கையில் இருந்து உயிரிழந்த நிலையில் குறித்த நபரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 66 வயதுடைய கண்டி, அம்பிடிய, தம்வெலபார வீதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.