யாழில் தலை விரித்தாடும் கொரோனா; பெரும் அச்சத்தில் மக்கள்…!

யாழில் அதிகரிக்கும் கொரோனா…!

தற்போது யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 143 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தகவல்கள் தொிவிக்கின்றன.

நேற்றைய தினம் 743 பேருக்கு நடத்தப்பட்ட பீ.சி.ஆர் பரிசோதனையின் முடிவிலேயே இத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் கொரோனா கட்டுப்பாடு மக்கள் மத்தியிலும் அதிகாரிகள் மத்தியிலும் கவனம் அற்ற நிலையிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன் இங்கு கோவில் திருவிழாக்கள், திருமண நிகழ்வுகள் போன்றன வழமை போலவே சாதாரணமாக நடப்பதுடன் பேருந்துச் சேவைகளும் தடையின்றி நடப்பதாக கூறப்படுகின்றது.