யாழ்.மாநகர வர்த்தகர்களுக்கு சுகாதார வைத்திய அதிகாரியினால் விடுக்கப்பட்ட முக்கிய அ.றி.வி.ப்.பு..!

வெளியிடப்பட்ட முக்கிய அ.றி.வி.த்.த.ல்..

தற்போது கொரோனா காரணமாக யாழ்.மாநகரில் முடக்கப்பட்டுள்ள பிரதேசங்களில் வர்த்தக நிலையங்களை நடத்தும், மற்றும் வர்த்தக நிலையங்களில் பணியாற்றும் யாழ்.மாநகரசபை எல்லைக்குள் வசிக்கும் நபர்களுக்கு நாளை மறுதினம் திங்கள் கிழமை பீ.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்படவுள்ளதாக அ.றி.வி.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.து.

இதற்கமைய காலை 7.30 மணிக்கு நவீன சந்தை கட்டிட தொகுதியில் இந்த பீ.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக யாழ்.வணிகர்கழகம் அறிவித்துள்ளது.

மேலும் கடந்த- 28,29 ஆம் திகதிகளில் பிசிஆர் பரிசோதனை செய்தவர்களுக்கும், இதுவரை பிசிஆர் பரிசோதனை செய்யாதவர்களுக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அத்துடன் 28,29 ஆம் திகதிகளில் செய்யப்பட்ட பரிசோதனையில் தொற்று உறுதிசெய்யப்பட்ட கடை உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்கள் திங்கட்கிழமை நடைபெறும் பிசிஆர் பரிசோதனைக்கு வருகைதரவேண்டாம் எனவும், அவர்களுக்குப் பிறிதொருதினத்தில் பிசிஆர் பரிசோதனை செய்யப்படும் எனவும் தெ.ரி.வி.க்.க.ப்.ப.ட்.டு.ள்.ள.து.

மேலும் மாநகரசபை எல்லைக்கு வெளியில் வதிவிடத்தைக் கொண்டவர்கள் அந்தந்தப் பிரதேச சுகாதார வைத்திய அதிகாரிகளைத் தொடர்புகொண்டு பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளமுடியும் எனவும் சுகாதார வைத்தியஅதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

எதிர் வரும் திங்கட்கிழமை நடைபெறும் பிசிஆர் பரிசோதனைக்கு 500 பேர் மாத்திரமே உள்வாங்கப்படுவதோடு ஏனையோருக்குத் தொடர்ச்சியாக அடுத்தடுத்த தினங்களில் பிசிஆர் பரிசோதனைகள் நடைபெறும் எனவும் யாழ்.வணிகர் கழகம் கு.றி.ப்.பி.ட்.டு.ள்.ள.து.