யாழில் நண்பர்களுடன் கடலுக்குச் சென்ற இ.ளை.ஞ.னி.ற்.கு நேர்ந்த சோ.க.ம்..!

கடலில் தவறி விழுந்து இளைஞன் உ.யி.ரி.ழ.ப்.பு…

யாழ் வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் நண்பர்களுடன் பொழுதுபோக்கிற்காக படகில் பயணித்த இளைஞன் திடீரென கடலில் தவறிவீழ்ந்து உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை 4.30 மணியளவில் செம்பியன்பற்று வடக்கைச் சேர்ந்த கெனடி பிறின்ஸ்ரன் (வயது 24) என்ற இளைஞர் நண்பர்களுடன் படகில் சென்றுள்ளார்.

தீடீரென இடையில் படகிலிருந்து அவர் தவறிவீழ்ந்தபோது படகின் இயந்திரத்தின் சுழலி வெட்டியதில் அவர்படுகாயம் அடைந்து கடலில் மூழ்கியிருக்கின்றார் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மூன்று மணி நேரத்துக்கும் மேலாக சுழியோடிகளின் துணையுடன் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் பின்னர் அவருடைய உடல் மீட்கப்பட்டுள்ளது.

இதன் பின்னர் அவருடைய உடலம் நோயாளர் காவு வண்டிமூலம் மருதங்கேணி வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துவிட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெ.ரி.வி.த்.து.ள்.ள.ன.ர்.