பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் திகதி அறிவிப்பு!

புத்தாண்டின் பின்னர் பல்கலைக்கழகங்கள் மீளத் திறக்கப்படும்

தமிழ் சிங்கள புத்தாண்டின் பின்னர் பல்கலைக்கழகங்கள் மீளத் திறக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

கோவிட் வைரஸ் தொற்று பரவுகை அச்சுறுத்தல் காரணமாக நாட்டின் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எதிர்வரும் 14ம் திகதியின் பின்னர் பல்கலைக்கழகங்களை மீளத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்த திகதியில் பல்கலைக்கழகங்களை மீளத் திறப்பது என்பது குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டு வருவதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.

கற்றல் நடவடிக்கைகளை ஆரம்பித்த உடன் பின்பற்றப்பட வேண்டிய சுகாதார வழிமுறைகள் குறித்தும் இணக்கப்பாடுகள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

பல்கலைக்கழக பரீட்சைகளை நடாத்துவதற்கு மானியங்கள் ஆணைக்குழு ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.