சீரியல் நடிகையின் கர்ப்பகால போட்டோஷூட்.! இணையத்தில் தீயாக பரவும் போட்டோஷூட்.!

ஸ்ரீதேவி

கோலிவுட் சினிமாவில் தனுஷ் நடித்து வெளியான புதுக்கோட்டையில் இருந்து சரவணன் படத்தின் மூலம் திரைத்துறைக்கு அறிமுகமானவர் தான் நடிகை ஸ்ரீதேவி. இதனை தொடர்ந்து பல்வேறு தொடர்களில் நடித்து மிகவும் பிரபலமடைந்தார்.

தற்போது இந்த நடிகை பூவே உனக்காக மற்றும் காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து வருகின்றார். இத்தகைய நிலையில், இவர் கடந்த பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு கர்ப்பமாக இருக்கும் இன்ப செய்தியை வெளியிட்டு இருக்கின்றார்.

இவருக்கு பல்வேறு பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர். இத்தகைய நிலையில், கர்ப்பமாக இருக்கின்ற ஸ்ரீதேவி தன்னுடைய கணவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தற்போது தனது இணையத்தில் வெளியிட்டு இருக்கின்றார்.

தற்போது இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்குகள் குவிந்து வருகின்றது.