கொரோனா குறித்து டபிள்யூ.எச்.ஓ-க்கு அறிக்கை சமர்ப்பித்த வடகொரியா.. ஷாக்கான உலக சுகாதார அமைப்பு.!

வடகொரியா
உலக நாடுகளிடம் இருந்து தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட வடகொரியா, உலக நாடுகள் கொரோனாவால் விழிபிதுங்கிய காலம் முதலாகவே தங்களின் நாட்டில் ஒருவருக்கு கூட கொரோனா வைரஸ் தொற்று இல்லை என்று அறிவித்து வருகிறது.

ஆனால், உலகளவில் மோசமான சுகாதார கட்டமைப்பை கொண்ட வடகொரியாவின், எப்படி கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லாமல் இருக்கிறது? என்று சர்வதேச நிபுணர்கள் சந்தேகம் தெரிவித்து வருகின்றனர்.

ஆனால், வடகொரியாவின் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருப்பதாகவும் அந்நாட்டின் சார்பில் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், தற்போதுவரை கொரோனா வைரஸ் பரவல் தங்களின் நாட்டில் இல்லை என்று வடகொரியா அரசு உலக சுகாதார அமைப்பிடம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில், கடந்த வருடம் ஏப்ரல் 1 ஆம் தேதி 23,121 பேருக்கு வடகொரியாவின் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

பரிசோதனை முடிவில் ஒருவருக்கு கூட கொரோனா உறுதியாகவில்லை. கடந்த மார்ச் மாதம் 26 ஆம் தேதி முதல் ஏப்ரல் 1 ஆம் தேதி வரை 732 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்துள்ளோம். அதிலும் கொரோனா யாருக்கும் இல்லை ” என்று தெரிவித்துள்ளது.

ஆனால், இதில் உள்ள சில கூற்றுகளை உலக சுகாதார அமைப்பு அதிகாரிகள் ஏற்றுக்கொள்ள மறுப்பு தெரிவித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.