அஸ்வின்- ஷிவாங்கிக்கு ஜோடியாக விருது கொடுத்த விஜய் டிவி.! ரெக்கை கட்டி பறக்கும் ஷிவாங்கி.!

குக் வித் கோமாளி

தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்ற நிகழ்ச்சி குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சியில் போட்டியாளர் மற்றும் கோமாளிகளாக உள்ள பாபா பாஸ்கர், அஸ்வின், புகழ், பாலா, சிவாங்கி என இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

தற்போது வித் கோமாளி நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. அதனால் இனி குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்க்க முடியாது என ரசிகர்கள் சோகத்தில் உள்ளனர்.

 

இந்நிலையில் தற்போது விஜய் டிவியில் விஜய் டெலிவிஷன் விருதுகள் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. அதில் அஷ்வின் மற்றும் ஷிவாங்கி இருவருக்கும் விஜய் தொலைக்காட்சியின் ட்ரண்டிங் ஜோடி விருது வழங்கப்பட்டுள்ளது.

இதை சிவாங்கி தனது சமூக வலைதளப் பக்கத்தில் என்னுடன் பணியாற்றிய அஸ்வினுக்கு நன்றி எனவும் இதுவரை அஸ்வினுடன் 9 முறை கோமாளி நிகழ்ச்சியில் ஜோடி சேர்ந்து ரசிகர்களை மகிழ்வித்து உள்ளதாகவும் பதிவிட்டுள்ளார்.