குக் வித் கோமாளி-யில் ஐஸ்வர்யா ராஜேஷ்.!? சுவாரஸ்ய சம்பவம் காத்திருக்கு.!

ஐஸ்வர்யா ராஜேஷ்

கோலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இவருடைய நடிப்பில் வெளியான காக்கா முட்டை என்ற திரைப்படத்தின் மூலமாக அவர் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

இதனை தொடர்ந்து, நடிகர் சிவகார்த்திகேயனுடன் நம்ம வீட்டு பிள்ளை, கனா போன்ற பல வெற்றித் திரைப்படங்களை அவர் கொடுத்து ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி இருக்கின்றார். நடிப்பு ஒருபுறம் இருந்தாலும் கூட ஐஸ்வர்யா ராஜேஷ் சமையலில் அதிகம் ஆர்வம் கொண்டவர்.

சமூக வலைதளப் பக்கத்தில் அவ்வப்போது தான் சமைக்கும் வீடியோவையும், புகைப்படங்களையும் இணையதளத்தில் வெளியிட்டு வருவார்.

இதை கண்ட ரசிகர்கள் நீங்கள் விஜய் டிவி, ‘குக் வித் கோமாளி சீசன் 3’ நிகழ்ச்சிக்கு வந்து விடுங்கள் என்று நீண்ட காலமாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இத்தகைய சூழலில், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்க உள்ளதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. முன்னதாக நடிகர் சிவகார்த்திகேயன் இந்த நிகழ்ச்சியில் விருந்தினராக கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது