சினிமா பாணியில் திருமணத்தில் நடந்த வில்லத்தனமும், இன்ப அதிர்ச்சியும்..!

சீனா

சகோதரரை மணப்பெண் ஒருவர் திருமணம் செய்துகொள்ள தயாரான நிலையில், திரைப்பட பாணியில் ப.யங்கர ட்விஸ்ட் சம்பவம் சீனாவில் அரங்கேறியுள்ளது.

சீனாவிலுள்ள ஜியாங்சு பகுதியைச் சார்ந்த மணமகனுக்கும், மணமகளுக்கும் திருமணம் செய்ய உறவினர்கள் ஏற்பாடு செய்துள்ளனர். திருமணம் நடைபெற இன்னும் சில நிமிடங்களே இருக்கிறது என்ற சூழ்நிலையில், மணமகன் மிகுந்த உற்சாகத்தில் இருந்துள்ளார்.

இந்த சமயத்தில், திடீரென திருமணத்திற்கு தயாரான மணமகளை பார்த்த மணமகனின் தாய்க்கு அ.திர்ச்சி ஏற்பட்டுள்ளது. பிறப்பிலிருந்தே இருந்த ஒரு தழும்பு மணமகளின் உடலில் இருப்பதை மணமகனின் தாயார் கண்டு அ.திர்ச்சி அடைந்து இருக்கிறார்.

மணமகளின் குடும்பத்தாரிடம் அவரின் உண்மையான தாய், தந்தை குறித்து விசாரிக்கப்பட்டு உள்ளது. இதன்போது, மணமகளின் தரப்பில் மகளை கடந்த 20 வருடங்களுக்கு முன்னதாக சாலையோரத்தில் இருந்து தத்தெடுத்து தங்களின் மகளாக வளர்த்து வருவதாகவும் கூறியுள்ளனர்.

அதே இருபது வருடங்களுக்கு முன்னதாக தான் தனது பெண் குழந்தையை தொலைத்து விட்டதாக கூறவே, மணமகன் பெரும் அ.திர்ச்சிக்கு உள்ளாகியுள்ளார். மேலும், இருவரும் சகோதர – சகோதரி உறவில் வருவார்கள் என்பதால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துள்ளனர்.

அடுத்த நொடியே மணமகனின் பெற்றோர் இன்ப அ.திர்ச்சி தகவலை கூறியுள்ளனர். அதாவது, தங்களது பெண் குழந்தையை 20 வருடங்களுக்கு முன்னதாக தொலைத்துவிட்டால், வேறொரு ஆண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால், இவர்களின் திருமணத்திற்கு தடையாக இருக்க முயன்ற சகோதர – சகோதரி உறவுகள் மறைந்து, இருவரும் இன்பத்துடன் திருமணம் செய்துகொண்டனர்.