இப்படியும் அண்ணன் – தம்பி..! அண்ணன் இ.றந்த அ.திர்ச்சியில், சில நொடியிலேயே த.ம்பியும் ம.ரணம்…!

இந்தியா

உடல்நலக்குறைவால் அண்ணன் கண்முன்னே உயிரிழந்ததை பார்த்த தம்பியும், அ.திர்ச்சியில் உயிரிழந்த சோகம் நடந்துள்ளது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள முடிகண்டநல்லூர் பகுதியைச் சார்ந்தவர் வீரமணி (வயது 71). இவரது தம்பி குணசேகரன் (வயது 64). இவர்கள் இருவரும் உடன்பிறந்த சகோதரர்களாக இருந்தனர். இந்த நிலையில், நேற்று வீரமணிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது.

இதனைத்தொடர்ந்து அங்குள்ள மருத்துவமனைக்கு வீரமணியை குணசேகரன் அழைத்துச் சென்றுள்ளார். காரில் ஏறிய சில நிமிடங்களிலேயே வீரமணி பரிதாபமாக உயிரிழந்த நிலையில்,

இதனை கண்டு அ.திர்ச்சியடைந்த தம்பி குணசேகரன் அடுத்த சில நொடிகளில் உயிரிழந்துள்ளார்.

சிறுவயதில் இருந்து தனது அண்ணன் மீது அதிக அன்பும், மரியாதையும் கொண்டிருந்த குணசேகரன் அண்ணன் இ.றந்த அ.திர்ச்சியில் அடுத்தடுத்து உயிரிழந்தது பெரும் சோகத்தை குடும்பத்தினரிடையே ஏற்படுத்தியுள்ளது.