படியில் நின்று பயணம் செய்த, மூதாட்டிக்கு நேர்ந்த சோகம்.!

தமிழகம்

விளாத்திகுளம் அருகே தனியார் பேருந்தின் படிக்கட்டில் நின்று பயணம் செய்த மூதாட்டி, கீழே வி.ழுந்து உ.யிரிழந்த சோகம் நடந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள விளாத்திகுளம் துரைசாமிபுரம் பகுதியைச் சார்ந்தவர் ஜெயா. இந்த மூதாட்டி ஸ்ரீ கிருஷ்ணா என்ற தனியார் பேருந்தில், விளாத்திகுளத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில், பேருந்தில் கூட்டமாக இருந்ததால் படிக்கட்டில் நின்று அவர் பயணம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த பேருந்து ஆழ்வார்நாயக்கன்பட்டி அருகே செல்கையில், ஜெயாவின் செல்போனுக்கு அழைப்பு வந்துள்ளது. படிக்கட்டில் நின்று செல்போனில் பேச அவர் முயற்சித்த நிலையில், எ.திர்பாராத விதமாக கீ.ழே வி.ழுந்து உ.யிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசின் உத்தரவை மீறி பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றிய ஸ்ரீகிருஷ்ணா பேருந்து ஓட்டுனர் மற்றும் நடத்துனரிடம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.