செங்கல் சூளையில் கர்ப்பிணி பெண்ணிற்கு நேர்ந்த சோகம்.. தாயும் – சேயும் உயிரிழந்த பரிதாபம்.!

இந்தியா

சோழவரம் அருகே கர்ப்பிணி பெண்ணுக்கு உறவினர்கள் பிரசவம் பார்ப்பதால், தாயும் – சேயும் உயிரிழந்த சோகம் அரங்கேறியுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள சோழவரம் எருமைவெட்டிபாளையம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கல் சூளை உள்ளது. இந்த செங்கல் சூளையில் ஒரிசாவை சேர்ந்த வடமாநில தொழிலாளர்கள் 50 க்கும் மேற்பட்டோர் தங்கி இருந்து பணியாற்றி வருகின்றனர்.

இதில், கோபு என்பவரது மனைவி பூஜா நிறைமாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். இவரும் செங்கல் சூளையில் தங்கியிருந்து கணவரோடு பணியாற்றி வந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு திடீரென பிரசவ வலி ஏற்படவே, உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் செங்கல் சூளைகளில் உறவினர்கள் சேர்ந்து பிரசவம் பார்த்துள்ளனர்.

இதில், பூஜா பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பெண் சிசு அடுத்து உயிரிழந்தது. இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர், பூஜா மற்றும் பச்சிளம் சிசுவின் உடலையும் கைப்பற்றி பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.