குண்டு வெடிப்பில் சிக்கினார் மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதி!

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும்

மாலைதீவின் முன்னாள் ஜனாதிபதியும் சபாநாயகருமான மொஹமட் நஷீத் குண்டு வெடிப்பில் சிக்கி காயமடைந்துள்ளார்.

இந்தக் குண்டு வெடிப்பு, அவரது வீட்டிற்கு வெளியில் நேற்று (வியாழக்கிழமை) இரவு இடம்பெற்றுள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்நிலையில், காயமடைந்த மொஹமட் நஷீத், ஏ.டி.கே. வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக அந்நாட்டு பொலிஸார் ருவிற்றர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

மேலும், இந்தக் குண்டு வெடிப்பில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணி ஒருவரும் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குண்டுவெடிப்பு இடம்பெற்ற பகுதி பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.