றுவன்புர அதிவேக வீதியின் நிர்மாண பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் ஆரம்பித்து வைக்கபட்டுள்ளது…

நாட்டின் ஏழாவது அதிவேக வீதியான றுவன்புர அதிவேக வீதியின் நிர்மாண பணிகள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸவினால் ஆரம்பித்து வைக்கபட்டுள்ளது.

கொரோனா தொற்று பரவல் காரணமாக அலரிமாளிகையில் இருந்து காணொளி தொழிநுட்பத்தின் ஊடாக பிரதமர் இந்த நிகழ்வில் பங்கேற்றார்.

தெற்கு அதிவேக வீதியின் கஹதுடுவ பகுதியில் இருந்து, இங்கிரிய, இரத்தினபுரி ஊடாக பெல்மடுல்லவரை இந்த றுவன்புர அதிவேக வீதி நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதன்படி, கஹதுடுவ முதல் இங்கிரிய வரையிலான 24.3 கிலோமீற்றர் வீதி முதற்கட்டமாக நிர்மாணிக்கப்படவுள்ளது.

இதற்கென 5 ஆயிரத்து 470 கோடி ரூபா நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.