வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்படும் கொரோனா தொற்றாளர்கள்…

தொற்றுக்குள்ளான

தொற்றுக்குள்ளான பலர் சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்லப்படாமல் வீடுகளிலேயே தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக பொதுசுகாதார பரிசோதகர்களின் தகவல்களின் ஊடாக அறிய முடிவதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.

புதிய கொரோனா தொற்றின் பரவல் நாட்டின் பல இடங்களில் அடையாளப்படுத்தப்பட்டுள்ளதை தொடர்ந்து, தொற்றாளர்கள் அடையாளம் காணப்படும் வீதமும் அதிகரித்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தொற்றாளர்களுக்கு சுவாச ரீதியான பிரச்சினைகள் அதிகரித்துள்ளதுடன், நோய் அறிகுறிகள் அதிகரித்து காணப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த நிலையில், தொற்றாளர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதானது தொடர்ந்தும் அதிகரித்துள்ளதினால் சிகிச்சையளிப்பதில் சிறமம் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, சிகிச்சை நிலையங்களை அதிகரித்தல் மற்றும் போதிய வளங்களை  ஏற்படுத்தி கொள்ள நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் அது போதுமானதாக அமைந்திருக்க வில்லை எனவும் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உறுப்பினர் பிரசாத் கொலம்பகே தெரிவித்துள்ளார்.