இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு!…

இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த திரைப்படத்தில் முன்னணி நடிகரான பிரபாஸ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபதில் சுதா கொங்கரா பிரபாஸிடம் கதை ஒன்றை கூறியுள்ளதாகவும், அந்த கதை பிரபாஸுக்கு பிடித்துள்ளதாகவும், தெரிவிக்கப்படுகிறது.

இயக்குனர் மணிரத்னத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சுதா கொங்கரா 2010 ஆம் ஆண்டு துரோகி திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார்.

இதனைத் தொடர்ந்து இவர் இயக்கத்தில் வெளியான இறுதி சுற்று திரைப்படம் பெறும் வரவேற்ப்பை பெற்றதோடு பல விருதுகளையும் வென்றுள்ளமை  குறிப்பிடத்தக்கது.